- 1 ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
- 2 நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
- 3 தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் புத்திரரையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் புத்திரரையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான்.
- 4 அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.
- 5 எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.
- 6 லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
- 7 முதலாவது சீட்டு யோயாரிபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,
- 8 மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,
- 9 ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,
- 10 ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,
- 11 ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,
- 12 பதினோராவது எலியாசீபின் பேர்வழிக்கும், பன்னிரண்டாவது யாக்கீமின்பேர்வழிக்கும்,
- 13 பதின்மூன்றாவது உப்பாவின் பேர்வழிக்கும், பதினான்காவது எசெபெயாபின் பேர்வழிக்கும்,
- 14 பதினைந்தாவது பில்காவின் பேர்வழிக்கும், பதினாறாவது இம்மேரின் பேர்வழிக்கும்,
- 15 பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும், பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும்,
- 16 பத்தொன்பதாவது பெத்தகியாவின் பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும்,
- 17 இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும், இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும்,
- 18 இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவது மாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.
- 19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்பிரகாரம், தங்கள் முறைவரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் இவைகளே.
- 20 லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
- 21 ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
- 22 இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,
- 23 எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அம்ரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
- 24 ஊசியேலின் குமாரரில் மீகாவும், மீகாவின் குமாரரில் சாமீரும்,
- 25 மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின குமாரரில் சகரியாவும்,
- 26 மெராரியின் குமாரராகிய மகேலிமூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,
- 27 மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, ரோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
- 28 மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
- 29 கீசின் புத்திரரில் யெராமியேலும்,
- 30 மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
- 31 இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
1 Chronicles 24
- Details
- Parent Category: Old Testament
- Category: 1 Chronicles
1 நாளாகமம் அதிகாரம் 24