wheel

ஜே சி சபைகளுக்கு மற்றும் விசுவாசிகளுக்கு வழிகாட்டு நடைமுறைகள்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவ பிள்ளைகளே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்.

கடந்த நாட்கள் எல்லாம் ஆண்டவர் நம்மை சுகத்தோடும் பலத்தோடும் சமாதானத்தோடும் காத்து வருகிற படியினால் அவருக்கே ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.

கடந்த ஆறு மாதங்களாக நம்முடைய சபைகள் ஆராதனைகள் இன்றி அடைப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வாயிலாக தேவனுடைய செய்தி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நம்மை வந்து அடைவதற்கு தேவன் இம்மட்டும் உதவி செய்தார். இப்பொழுதும் தேசத்திலுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சபைகளை திறப்பதற்கு அரசாங்கம் சிறிய வாயிலை திறந்ததற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்

இப்பொழுது சபைகளை திறக்க அனுமதி கொடுக்கப் பட்டிருந்தாலும் தேசத்தில் நோயின் பரவுதல் தீவிரமாக தான் காணப்பட்டு வருகிறது, எனவே சபை ஆராதனைகளில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிகாட்டும் நெறிமுறைகளை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அவைகளை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருவது நலம் என்று எண்ணி இந்த செய்தி உங்களுக்கு அனுப்பப்படுகிறது

  1. சென்னை பகுதியில் ஆராதனை ஒன்பதரை மணிக்கு தொடங்கும்
  2. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சபைகளில் ஆராதனை ஏழு மணிக்குத் துவங்கி ஒன்பது மணிக்கு நிறைவுபெறும்
  3. பிற இடங்களில் வழக்கமான நேரத்தில் ஆராதனை தொடங்கும்
  4. ஆராதனைகளில் 10 வயதிற்கு கீழே உள்ளவர்களும் 65 வயதிற்கு மேலே உள்ளவர்களும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது
  5. ஒவ்வொரு சபை வாசல்களிலும் சரீர வெப்ப அளவுமானி மூலம் சோதனை செய்யப்படும்
  6. காய்ச்சல், சளி, தொடர் இருமல் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், சரீர பலவீனம் உள்ளவர்கள் சபைகளில் ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டாம்
  7. மூக்கு மற்றும் வாய் மூடி இருக்கும் வண்ணமாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இந்த முக கவசத்தை ஆராதனை முடிந்து வெளியே செல்லும் வரை அணிந்திருக்க வேண்டும்
  8. உங்கள் காலணிகளை சபைக்கு வெளியே தனித்தனியே இருக்குமாறு விட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
  9. குடிப்பதற்கு தேவையான குடிநீரை நீங்களே கொண்டுவந்து உபயோகப்படுத்த வேண்டும், ஆலயத்தில் குடிதண்ணீர் வைக்கப்பட மாட்டாது
  10. ஆலயத்திற்கு உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் அங்கே வைக்கப்பட்டிருக்கிற ஹண்ட் சேனிடைசர் கொண்டு உங்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்
  11. போடப்பட்டு இருக்கிற நாற்காலிகளை இடமாற்றம் செய்யக்கூடாது சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆராதனை ஸ்தலத்தில் அமரவேண்டும்
  12. விசுவாசிகள் ஒருவருக்கொருவர் கை கொடுப்பது கட்டிப்பிடிப்பது போன்ற காரியங்களை செய்ய வேண்டாம்
  13. ஆராதனை முடிந்த பிறகு ஒன்றாக நின்று பேசும்படியான சூழல்களை உருவாக்க வேண்டாம், உடனடியாக உங்கள் வீடுகளுக்கு விரைந்து செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்
  14. ஆராதனை முடிந்தவுடன் கூட்டமாக வெளியேறாமல் பொறுமையாக வரிசையாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
  15. சபைகளில் ஆராதனை முடிந்த பிறகு போதகர் உங்களை சந்தித்து பேசுவதை தவிர்த்து விடுவார்கள்
  16. ஒருவேளை உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் எனில் தொலைபேசி வாயிலாகவோ இல்லாவிட்டால் குறிக்கப்பட்ட இடத்தில், குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் ஊழியக்காரர்களை சந்தித்து ஜெபித்துக் கொள்ளலாம் எக்காரணம் கொண்டும் சபைகளில் ஆராதனைக்கு பின்பாக விசுவாசிகள் கூடி ஜெபிக்கும்படிக்கு ஊழியர்கள் இடத்தில் கடந்து வர வேண்டாம்
  17. சபைகளில் ஞாயிறு வேதாகம பள்ளி மற்றும் சிறுவர் கூடுகை, வாலிபர் கூடுகை போன்றவை மறு அறிவிப்பு வரும் வரைக்கும் நடைபெறாது
  18. கடந்த ஆறு மாதங்களாக செய்யப்பட்டு வந்தது போல தொடர்ந்து ஆராதனை ஆன்லைன் மூலமாக ஒளிபரப்பப்படும்
  19. ஆலய ஆராதனை முடிந்த பின் வழக்கமாக கொடுக்கப்படும் உணவு மற்றும் தேநீர் வழங்படாது.
  20. வாரநாட்களில் எந்நேரமும் ஆலயம் வர மற்ற யாவருக்கும் அனுமதி உண்டு.

இந்த நடைமுறைகள் எல்லாம் கடினமானதாக இருந்தாலும் சபையினுடைய மற்றும் சபை விசுவாசிகளுடைய நலனை முன்னிறுத்தியே செயல்படுத்தப்படுகிறது. செய்யப்படுகிற காரியங்களில் யாதொரு தொய்வு உண்டாகுமானால் அதைக்கொண்டு சத்துரு தூஷிப்பதற்கு  இடம் உண்டாகக்கூடும். ஆகவே அனைவரும் பரிபூரணமாக இந்தக் காரியங்களுக்கு ஒத்துழைப்பு தரும்படியும் நம்முடைய சபைகளுடைய ஒழுக்கம் மற்றும் ஐக்கியத்தை காத்துக் கொள்ளும்படியாக அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

இந்த நடைமுறைகள் எல்லாம் தற்காலிக ஏற்பாடுகள் தான். ஆண்டவர் சீக்கிரமாய் தேசத்தில் கொள்ளை நோயை அகற்றும் பொழுது இந்த கட்டுப்பாடுகள் யாவும் விலக்கப்பட்டு நாம் மீண்டும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியோடு தேவனை ஆராதிக்க தேவன் நிச்சயமாய் நமக்கு உதவி செய்வார்

தேவனுக்கே எல்லா துதியும் மகிமையும் கனமும் உண்டாவதாக.

 

கிறிஸ்துவின் ஊழியத்தில்

போதகர்