- 1 புறஜாதிகளுக்கு விரோதமாய் எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
- 2 எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:
- 3 கேடகங்களையும் பரிசைகளையும் ஆயத்தம்பண்ணி, யுத்தத்துக்கு வாருங்கள்.
- 4 குதிரைவீரரே, குதிரைகளின் மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.
- 5 அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 6 வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியண்டையிலே அவர்கள் இடறிவிழுவார்கள்.
- 7 பிரவாகம்போல் புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்?
- 8 எகிப்தியனே பிரவாகத்தைப் போல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழும்பிவருகிறான்; நான் போய், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான்.
- 9 குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைபிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.
- 10 ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு.
- 11 எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ கீலேயாத்துக்குப் போய், பிசின் தைலம் வாங்கு; திரளான அவிழ்தங்களை நீ கூட்டுகிறது விருதா, உனக்கு ஆரோக்கியமுண்டாகாது.
- 12 ஜாதிகள் உன் இலச்சையைக் கேள்விப்பட்டார்கள்; உன் கூக்குரலால் தேசம் நிறைந்தது; பராக்கிரமசாலியின்மேல் பராக்கிரமசாலி இடறி, இருவரும் ஏகமாய் விழுந்தார்கள் என்றார்.
- 13 எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் கர்த்தர் சொன்ன வசனம்:
- 14 ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துபோடுகிறதென்று சொல்லி, எகிப்திலே அறிவித்து, மிக்தோலிலே கூறி, நோப்பிலும் தக்பானேசிலும் பிரசித்தம்பண்ணுங்கள்.
- 15 உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தன்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.
- 16 அநேகரை இடறப்பண்ணுகிறார்; அவனவன் தனக்கடுத்தவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும், நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள்.
- 17 எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.
- 18 பர்வதங்களில் தாபோரும் சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறார்.
- 19 எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கும்.
- 20 எகிப்து மகா நேர்த்தியான கடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்.
- 21 அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.
- 22 அவன் பாம்பைபோல சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடாரிகளோடு அதின்மேல் வருவார்கள்.
- 23 எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.
- 24 எகிப்தின் குமாரத்தி கலங்குவாள்; வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.
- 25 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் நோ என்னும் பட்டணத்திலுள்ள திரளான ஜனங்களையும், பார்வோனையும், எகிப்தையும், அதின் தேவர்களையும், அதின் ராஜாக்களையும், பார்வோனையும், அவனை நம்பியிருக்கிறவர்களையும் விசாரித்து,
- 26 அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 27 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை.
- 28 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.
Jeremiah 46
- Details
- Parent Category: Old Testament
- Category: Jeremiah
எரேமியா அதிகாரம் 46