அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடும் முன்
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர் - திறவுண்ட
கர்த்தரின் பணிக்குத் தான் கதவடைத்தார்
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள் - திறவுண்ட
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் - திறவுண்ட
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே - திறவுண்ட
அன்பெனும் ஆவியால் நிறைந்திடுமே
இந்தியாவின் எல்லாத் தெருக்களிலும்
இயேசுவின் நாமமும் விரைந்திடுமே - திறவுண்ட