இரட்சகர் வீற்றிருந்தார்
இயேசு பன்னிரு சிஷருடன்
ஆசீர்வதித்ததைப் பிட்டுத் தந்தார்
எந்தன் சரீரம் இதுவே புசிப்பீர்
என்றே பரிமாறினார் - இறுதி
பாவத்தைக் கழுவின தூய இரத்தம்
இரட்சண்ய புது உடன்படிக்கையே
இதை பானம் பண்ணினார் - இறுதி
அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான்
துரோகியாம் யூதாஸ் துணிக்கையும் வாங்கி
தீவிரம் போய் மறைந்தான் - இறுதி
சத்திய ஆவியால் இணைத்தாரே
நன்றியும் பொங்க நிலைத்து நின்றாரே
நற்கருணை ஈகுவார் - இறுதி
கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையுடன்
சுந்தோஷமாக சமாதானமாக
பந்தியில் பங்கடைவோம் - இறுதி
பிதாவின் இராஜ்ஜிய பந்தியிலும்
வாஞ்சையாய் நாமும் வருகையில் சென்று
விரைந்து சேர்ந்து கொள்வோம் - இறுதி