விண் தூதரோடு சேர்ந்து நானும் அன்பரைப் பாடிடுவேன்
முற்றும் வெற்றி பெற்றவர்க்கு நித்திய மகிமையே
வாடிப்போகும் பூவைப்போல மாய்ந்து போகுமே
பஞ்சு போல் பறந்திடும் இப்பாழுலகமே
எக்காளம் முழுங்கும் போது மகிமையோடெழும்பும்
என் நேசர் சமூகம் என்ன இன்பம் சொல்லலரியதே
பொன்னேசரோடு நின்று நானும் ஓடியுலாவிடுவேன்
கர்த்தாவின் சமூகந்தனில் மகிழ்ந்து பூரிப்பார்
ஆ! என்ன இன்பம்! என்ன மதுரம்! சொல்லலரியதே