இரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம் அதைப்
பெற்று அனுபவித்தால் என்ன சுகம்
கின்னரம் தம்பூரு வீணை இன்னோசை கேட்கலாம் - என்ன
சுத்தப் பொன்னால் செய்த வீதியுலாவலாம் - என்ன
ஜீவ விருட்சத்தின் கனியும் புசிக்கலாம் - என்ன
சிங்காசனத்தில் சொகுசாயிருக்கலாம் - என்ன
கேட்டின் மனுடர் வந்தூடே இருப்பதில்லை - என்ன
ஆசன மீதிலிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் - என்ன