அவர் நாமம் அதிசயமே
இயேசுவை வாழ் நாளெல்லாம் துதிசெய் - என்னாத்துமாவே
ஏக தேவன் இயேசுவை துதி
பாவம் போக்கி ரோகம் நீக்கி
தூக்கி எடுத்திட்டாரே - கரத்தால்
தாங்கி அணைத்திட்டாரே
ஜீவப்பாதை செல்ல செய்தாரே
சுத்தனாய் நான் ஜீவித்திட
சுத்த ஆவி ஈந்தார் - அவருக்கு
சதா துதி ஸ்தோத்திரமே
தம்மைத்தாமே எனக்காய் ஈந்தார்
இனி என்ன செய்திடார் - எனக்காய்
யாவும் முடிந்திடுவார்
நன்றாய் யாவும் அளித்திட்டாரே
பதில் என் செய்வேன் ஒன்றும் இல்லை
நன்றியால் துதிப்பேன் - அவரை
எப்போதும் ஸ்தோத்தரிப்பேன்
எந்தன் பாரம் யாவும் தீர்ந்தாரே
அலைபோல் சாத்தான் சீறும் போது
தூங்காது காத்திட்டார் - தூதரால்
வேலி அடைத்தும் விட்டார்
என்னை விட்டே பிரிப்பவன் யார்
என்ன தொல்லை நேரிடினும்
அன்பரின் கையினில் - பறிக்க
யாதொன்றும் இல்லை இல்லை