உந்தனின் பாதத்தில் தாழ்த்துகிறேன்
ஏற்றுக் கொள்ளும், இயேசுவே!
தாசராம் எமக்கோர் பாக்கியமே!
தாங்கிடுவீர் உம் காருண்யத்தால்
தாபரிப்பேன் திருப்பாதங்களில் - என்னை
உண்மையுள்ளோனாய் நான் ஜீவித்திட
உம் கிருபை என்னில் தங்கிடவே
என்னை என்றும் நீர் வழி நடத்தும் - என்னை
நானோர் மண்பாண்டமாய் வனைந்திட
உம் சித்தம் செய்ய அர்ப்பணித்தேன்
என் கரம் பிடித்து நீர் நடத்தும் - என்னை
மாண்டழியா தென்னைக் காத்துக் கொள்வீர்
மாசில்லாத் தூய்மை நான் தரிக்க
மாபெரும் கிருபை நீர் அருள்வீர் - என்னை
பஞ்சமோ பசியோ வருத்தமோ
கர்த்தனே! உந்தனின் அன்பினின்றே
பிரிக்க ஒன்றாலும் முடியாதே - என்னை