எம் பூரண சீயோனே
உன்னதத்தில் வாழ்வோம் - இயேசு
பக்தர்களே ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்
வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
இயேசுவின் மேல் நின்ற வீடாய் நாமிலங்கிடுவோம் - எம்
அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
ஆ! பேரின்ப ஆத்துமாவில் ஆனந்தங்கொள்வோம் - எம்
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம் - எம்
ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
பாழுலகை வேகம் தாண்டி அக்கரை சேர்வோம் - எம்
வாஞ்சையாய் சபையாய் அன்று இயேசுவை சந்திப்போம்
மத்திய வான விருந்தில் பங்கடைந்திடுவோம் - எம்