வல்லமையின் தேவன் நம்தேவன்
தாசர்களின் ஜெயபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்
என்றே ஆர்ப்பரிப்போம்
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார் - கர்த்தரே
வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன்
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் - கர்த்தரே
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன் - கர்த்தரே
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள் - கர்த்தரே