தொல்லை மிகு இவ்வுலகில் எல்லாம் இயேசுவே
நாயனு மெனக்கன்பான ஞான மணவாளனும் - எல்லாம்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் - எல்லாம்
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட ஔஷதமும் - எல்லாம்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும் - எல்லாம்
பிணியாளியும் மீட்பருமென் பிரியமத்தியஸ்தனும் - எல்லாம்
ஞான கீதமும் சகலமும் நாட்டமும் கொண்டாட்டமும் - எல்லாம்