யாருக்கு அஞ்சிடுவேன்
கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர்
யாருக்கு அஞ்சிடுவேன் - நான்
இன்னமும் நான் அன்பு கூர்ந்து
நோக்குவேன் உம் பொன் முகமே
சூழ்நிலைகள் மாறினாலும்
வெட்கமடைந்து போவதில்லையே - கர்த்தர்
கைவிடும் வேளை வரினும்
அரவணைக்கும் உந்தன் கரமே
கழுகு தன் குஞ்சுகளைப்
பறந்து காப்பது போல்
காத்த உந்தன் செட்டை தஞ்சமே - கர்த்தர்
எரிகோவின் மதில்களைத்
தகர்த்து சாம்பலாக்கிடுவீர்
எதிரிகளின் சேனைகள்
என்றும் என்னை தொடராமல்
பின் தொடர்ந்து வந்திடுவீர் - கர்த்தர்
பாவம் பாரில் படர்ந்து பெருகி
உலக வேஷம் கடந்து செல்லுதே
வருகைத் தாமதிக்கையில்
புறாவைப்போல் சிறகிருந்தால்
பறந்து வந்து உம்மைக் காணுவேன் - கர்த்தர்