திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் - அழகாய்
வெள்ளை குருத்தாம் ஓலை பிடித்து
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று - அழகாய்
இனி இவர்கள் தாகம் அடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை - அழகாய்
ஆண்டவரை ஆராதிக்கிறார்
இதயத்திலே இறையரசாம்
இன்ப இயேசுவே வாசம் செய்கிறார் - அழகாய்
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்றபணி செய்து முடித்தோர் - அழகாய்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தை காத்தவர்கள் - அழகாய்
அற அகற்றி துடைத்திடுவார்
அழைத்து செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே - அழகாய்
தூய ஆவியே துதி ஸ்தோத்திரம்
கன மகிமை பெலன் வல்லமை
என்றென்றைக்கும் உம்முடையதே - அழகாய்