கூடிடும் சமயங்களில்
பேசுவார் தியானத்திலே
அவர் தம் கிருபைகள் அளிக்க
மா பர்வதம் நிலை பெயர்ந்தும்
என்றும் மாறாத அவர் கிருபைகள்
தம் மக்களுக்காறுதலே
சிறு மந்தையாய் சேர்த்திடுவார்
நித்திய ராஜ்யத்தை தந்திடுவார்
சத்திய பாதையில் நடந்ததினால்
அன்புக்கரம் நம்மை தாங்கிடுமே
நஷ்டங்கள் மாறிடுமே
நாதன் இயேசுவின் நாமத்தினால்