இரக்கத்தின் ஐஸ்வரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே
நள்ளிரவின் நண்பனே
அன்பின் பிதா முன்னிலையில் இன்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபங்கேளுமே
மற்றும் பலர் மாள்வதைக்
கண்டு சகித்திடாதென்றும் ஜெபித்திடும்
கண்ணீர் ஜெபங்கேளுமே
அன்பே இரங்கினீரே
யோனா உரைத்த தம் ஆலோசனை தந்து
ஏழை ஜெபங்கேளுமே
எல்லாமே வீணாகுமே
அத்திமரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபங்கேளுமே
சோதோமின் பக்தனையே
ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்தோர்
ஆதி ஜெபங்கேளுமே