நித்தம் தம்மைத் தத்தஞ் செய்து வீர சேவையில்
ஜீவன் சுகம் பெலன் யாவையும் ஈந்ததால்
சுத்த சுவிசேஷம் ஓங்குதே.
பாய்ந்து செல்லுவீர் நம் இயேசுவின் பின்னே
தேவ ராஜ்யம் ஓங்கவே பாவ மக்கள் மீளவே
தியாகப் பரிசுத்தராய் சேவை செய்குவோம்
ஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட
கல்வாரியில் மரித்தே உயிர்த்தெழுந்த
கர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் - போர் வீரரே
நாடித்தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்
மாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி
கண்டறிந்த சாட்சி கூறுவோம் - போர் வீரரே
லோக, இன்ப துன்பமோ நெருக்கிடாமலே
இன்னமும் முன்னேறி சேவிப்போம் - போர் வீரரே
ஊக்கமாய் உறுதியாய் தகுதி பெற்றிட
ஆண்டவர் அருள் பொழிகுவார் - போர் வீரரே
சத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்
வல்ல விசுவாச சேவையில் - போர் வீரரே
பாடுபட்ட பக்தரோடு நாமும் சேருவோம்
ஆர்ப்பரித்துக் கூடி வாழுவோம் - போர் வீரரே