இராஜ இராஜனைத் தேவ தேவனை
வீரசேனைக் கூட்டமாகச் சேவிப்போம்
முற்று முடிய வெற்றியடைய
சற்றும் அஞ்சிடாமல் இயேசு நாமத்தில்
சாத்தானைத் தோற்கடித்து மேற்கொள்வோம்
சூரியனைப்போல் சந்திரனைப் போல்
கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றாள் - மெய்
எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்
காய்ந்து நிற்கும் பூமியில் நடத்துவார் - மெய்
தளர்ந்திடவே அடங்கிடவே
பரிசுத்தவான்களே கெம்பீரிப்போம் - மெய்
பரதேசிகள் சில சீஷர்கள்
பற்றும் விசுவாசத்தோடு முன் செல்வோம் - மெய்
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஆச்சரியமாகவே நடத்துவார் - மெய்
கூட்டமாகவே கூடிச் சேரவே
மங்கள சுபதினம் கண்ணால் காண்போம் - மெய்