“இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” – லூக்கா 2:11
அர்ஜென்டைனா நாட்டைச் சேர்ந்த அனலியா என்ற பெண்மணி 5வது பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்பெண்மணியை மகப்பேறு மருத்துவருடன் ஒரு மருத்துவக் குழுவே பிரசவம் பார்த்தது. பிறந்த குழந்தையை நன்கு பரிசோதித்த பின்னர், குழந்தை இறந்தே பிறந்ததாகக் கூறி இறப்பு சான்றிதழ் ஒன்று கொடுத்தனர்.
சில நடைமுறைகளுக்குப் பின்னர், இறந்த குழந்தையை எடுத்துச் செல்லுமாறு சொல்லியிருந்தார்கள். குழந்தை பிறந்து 12 மணி நேரம் கழித்து அனலியாவும் அவள் கணவரும் இறந்த தங்கள் குழந்தையை படம் எடுக்க விரும்பினர். எனவே மருத்துவமனை ஊழியரின் அனுமதி பெற்று, குழந்தையை வைத்திருந்த பெட்டியை திறந்தபோது குழந்தை அழ ஆரம்பித்தது. மிகவும் மகிழ்ச்சியடைந்த பெற்றோர், ஆனந்த கூத்தாடினர். இக்குழந்தைக்கு “லுஸ்மிலாகுரோஸ்” என பெயரிட்டனர். இதற்கு “அதிசய வெளிச்சம்” என்று அர்த்தம். இதைக் கேள்வியுற்ற சுகாதார அமைச்சர் பிரசவம் பார்த்த குழுவினரை தற்காலிக பணி நீக்கம் செய்து, நிர்வாகத்தையும் விசாரணை செய்தார். சுமார் 12 மணி நேரம் குளிரூட்டப்பட்ட பெட்டியிலிருந்த குழந்தை உயிருடனிருந்தது பெற்றோரை மகிழ்ச்சியடைய செய்த அதே வேளையில் பலரை கலக்கமடையவும் செய்தது.