நான் சென்ற சர்ச்சில் சரியான கூட்டம்.
காணிக்கை எடுப்பவர் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துப் போட்டேன்...! பலர் பார்க்கும்படி பெருமிதமாக..!!
ஆனால் அது சற்று கிழிந்து, வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த 10 ரூபாய் நோட்டு..!
சரி நம்ம கடவுள் தானே..!
அவரிடம் செல்லாத நோட்டு என்று ஏதேனும் உண்டோ?
இதெல்லாம் இறைவனுக்கு பெரிய விஷயமல்ல என்று ஆறுதல் படுத்திக் கொண்டு காணிக்கை கீர்த்தனைப் பாடலை பாடிக் கொண்டிருந்தேன்..!..
அடுத்த வினாடி...
எனக்கு பின்னாடி நின்ற ஒருவர் என் தோளைத் தட்டி ரூ 500/- கொடுத்தார்..!..
அவருக்கு காணிக்கை பை தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி காணிக்கை பையில் போட்டு விட்டு,
''சே! எவ்வளவு பக்தி இவருக்கு'' என்று வியந்தேன்.!.
பின் ஜெபம் செய்து விட்டு , வெளியே வந்தால் அவரும் அருகே நடக்க அவரிடம்..
சார் நீங்கள் உண்மையிலே கிரேட் என்றேன்..
அவர் புரியாமல் "எதுக்கு" என்றார்...
"காணிக்கையாக ரூ 500 போடுகிறீர்களே எவ்வளவு பக்தி உங்களுக்கு" என்றேன்..
அதற்கு அவர்..
"நானா? இல்ல சார்.. நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 500/- ரூபாய் விழுந்தது, அதைத்தான் நான் எடுத்து உங்களிடத்தில் கொடுத்தேன்.." என்றார் !!