-
Details
-
Parent Category: Stories For Sermon
-
Category: Info Bytes (குறுந்தகவல்கள்)
-
Hits: 788
- வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்..!
- முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்..!
- குறுக்கு வழிக்குப் போகுமளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள்!
- மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்!
- அடிமையாகும் அளவிற்கு அன்பை செலுத்தாதீர்கள்!
- சண்டை உண்டாகுமளவிற்கு விவாதத்தை தொடராதீர்கள்!
- அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையை சேர்க்காதீர்கள்!
- பழிவாங்கும் அளவிற்குப் பகையை வளர்க்காதீர்கள்!
- மனம் வெறுக்கும் அளவிற்கு செயல்கள் செய்யாதீர்கள்!
- கண்ணீர் வடியுமளவிற்கு கவலைப்படாதீர்கள்....!
- நீங்கள் அடைவதெல்லாம் மற்றவர் தந்த பரிசு.. நீங்கள் இழப்பதெல்லாம் மற்றவருக்கு தரும் வாய்ப்பு..!!
- நேரங்கள் நேர்மையானவை..! அதனால் தான் அவை யாருக்கும் காத்திருப்பதில்லை..!!
- ஏழையின் வீட்டில் பசிதான் நோய்க்கு காரணம்..! பணக்காரன் வீட்டில் உணவுதான் நோய்க்கு காரணம்..!!