ஓர் முதியவர் தனது பேரனிடம்:
பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
பேரன்: அது எப்படி தாத்தா?
முதியவர்:
- சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்
- மது அருந்த பணம் வேண்டும்
- சிகரெட் புகைக்க பணம் வேண்டும்
- கூடாத இசை கேட்க பணம் வேண்டும்
- பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,
ஆனால் மகனே!
- அன்பு காட்ட பணம் தேவையில்லை
- கடவுளை வணங்க பணம் தேவையில்லை
- சேவை செய்ய பணம் தேவையில்லை
- விரதம் இருக்க பணம் தேவையில்லை
- மன்னிப்பு கோர பணம் தேவையில்லை
- பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை
- நம் உரிமையை நிலைநாட்ட பணம் தேவையில்லை
இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்" சொல்ல வேறெதுவும் தேவையில்லை
மகனே! நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா? இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?
முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.