Details
Parent Category: Stories For Sermon
Category: Info Bytes (குறுந்தகவல்கள்)
Hits: 741
வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்..!
முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்..!
குறுக்கு வழிக்குப் போகுமளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள்!
மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்!
அடிமையாகும் அளவிற்கு அன்பை செலுத்தாதீர்கள்!
சண்டை உண்டாகுமளவிற்கு விவாதத்தை தொடராதீர்கள்!
அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையை சேர்க்காதீர்கள்!
பழிவாங்கும் அளவிற்குப் பகையை வளர்க்காதீர்கள்!
மனம் வெறுக்கும் அளவிற்கு செயல்கள் செய்யாதீர்கள்!
கண்ணீர் வடியுமளவிற்கு கவலைப்படாதீர்கள்....!
நீங்கள் அடைவதெல்லாம் மற்றவர் தந்த பரிசு.. நீங்கள் இழப்பதெல்லாம் மற்றவருக்கு தரும் வாய்ப்பு..!!
நேரங்கள் நேர்மையானவை..! அதனால் தான் அவை யாருக்கும் காத்திருப்பதில்லை..!!
ஏழையின் வீட்டில் பசிதான் நோய்க்கு காரணம்..! பணக்காரன் வீட்டில் உணவுதான் நோய்க்கு காரணம்..!!