கைகால்களைக் கட்டி கதற கதற அறுவை சிகிச்சையை மேற்கொண்ட காலத்தில் நோயாளிகளின் கதறல் சத்தத்தைக் கேட்டு வருந்திய சர் ஜேம்ஸ் சிம்சன் அவர்கள், தனது 18 வயதிலேயே அறுவை சிகிச்சை நிபுணரானவர் குளோரோஃபார்ம் எனும் மயக்க மருந்தினைக் கண்டுபிடித்தார். அதனை முதன்முதலாக ஒரு பிரசவ ஸ்திரீக்கு செலுத்தவும் அவள் வலியின்றி பிள்ளை பெற்று அந்த சந்தோஷத்தின் மிகுதியினால் அனஸ்தீஷியா என்றாளாம். எனவே அந்த பெயர் இன்றளவும் வழங்குகிறது.
இத்தகைய சாதனையை செய்திட்ட ஜேம்ஸ் சிம்ஸன் தன் சொந்த மகளையே கொடிய வியாதிக்கு பலிகொடுத்த துக்கத்தின் மிகுதியினால் சோர்ந்திருந்த நேரத்தில் சிலுவையின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டார். மருத்துவத்தின் அரிய சாதனைகள் பலவும் செய்திட்ட அவரிடம் ஒருமுறை இவ்வாறு கேட்கப்பட்டது, உங்கள் கண்டுபிடிப்புகளில் சிறந்ததாக எதை நினைக்கிறீர்கள் என்பதாக. அவர் சொன்னது, என்னை நேசிக்கும் இரட்சகரை நான் கண்டுபிடித்ததே பெரும் சாதனை என்றாராம்.
இன்றைக்கு மதபேதமின்றி உலகத்தார் பயன்படுத்தும் அரும்பொருளான அனஸ்தீஷியா எனப்படும் குளோரோஃபார்ம் மருந்தை கண்டுபிடித்தவர் கர்த்தருக்கு அஞ்சி நடந்த ஒரு பரிசுத்தவான் என்ற தகவல் நம்மை உற்சாகப்படுத்தட்டும்.