இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான பரி .தோமா கி.பி. 52 ம் ஆண்டு மலபார் (இன்றைய கேரளா) பகுதியில் உள்ள முசிறித் துறைமுகத்தின் வழியாக இந்தியாவிற்கு சுவிசேஷம் அறிவிக்க வந்தார்.
அப்போஸ்தலர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சுவிசேஷப் பணி செய்யச் சென்றபோது பரி.தோமா இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.
கேரளா மாநிலத்தில் பரி.தோமா ஊழியம் செய்து, 7 திருச்சபைகளை நிறுவினார். அதில் ஒரு திருச்சபை கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவிதாங்கோடு என்னும் ஊரில் இன்றும் உள்ளது.
கி.பி. 63 ல் பரி . தோமாவால் அரப்பள்ளி" என்கிற ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது. இந்த சிற்றாலயமே உலகின் பழைமையான திருச்சபையாக இன்று வரை கருதப்படுகிறது.
சோழ மண்டல கடற்கரை வழியாக சென்னை - மயிலாப்பூர் வந்தடைந்த பரி.தோமா இப்பகுதியில் சுவிசேஷ ஊழியம் செய்ததை அங்கிருந்த கோவில் பூசாரிகள் எதிர்த்தனர்.
அதன் விளைவாக அவரை கொலை செய்ய திட்டமிட்டு, சென்னையில் உள்ள இன்றைய புனித தோமையார் மலையில் அவரை ஈட்டியால் குத்திக் கொன்றனர். இப்படியாக, பரி.தோமா இரத்த சாட்சியாக சென்னையில் மரித்தார்.
கேரளா மாநிலத்திலும், தமிழ்நாட்டிலுமாக ஏராளமான குடும்பங்கள், இராஜாக்கள் மற்றும் மலபாரில் வாழ்ந்த யூதர்கள் அனைவரும் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக் கொள்ள பரி.தோமா கடுமையான சுவிசேஷப் பணிகளைச் செய்தார்.
பரி.தோமா இந்தியாவின் புனித புரவலர் என்றும் அழைக்கப்பட்டார்.
பரி.தோமா சிந்திய இரத்தம் கோடான கோடி இந்தியர்கள் உயிர் மீட்சி அடைய நிச்சயம் வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை! ஆமென்!