பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று முதல் பத்து வரையிலிலுமான முக்கிய காரியங்கள்:-
- 1. ஒன்று செய்:
பிலிப்பியர் 3:13, 14
"ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரமஅழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்."
- 2. இரண்டையும் விட்டு விடாதே:
நீதிமொழிகள் 3:3
"கிருபையும் சத்தியமும் உன்னை விட்டு விலகாதிருப்பதாக;"
- 3. மூன்றில் நிலைத்திரு:
1 கொரிந்தியர் 13:13
"விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது;"
- 4. நான்கையும் தரித்துக்கொள்:
எபேசியர் 4:23, 24
"உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்."
- 5. ஐந்தையும் அழித்துப் போடு:
கொலோசெயர் 3:5
"விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயங்களை அழித்துப் போடுங்கள்."
- 6. ஆறையும் வெறுத்து விடு:
நீதிமொழிகள் 6:16 – 19
"ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, தூராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம்பேசும் பொய்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே."
- 7. ஏழையும் எடுத்துக்கொள்:
எபேசியர் 6:14 – 18
சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம், இரட்சண்யமென்னும் தலைச்சீரா, தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம், ஜெபம் பண்ணி விழித்திருத்தல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 8. எட்டையும் விட்டுவிடாதே கூட்டி வழங்குங்கள்:
2பேதுரு 1:5 – 7
"நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தொடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்."
- 9. ஒன்பதையும் அனுபவமாக்கு:
கலாத்தியர் 5:22, 23
"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. ஆவியின் வரங்கள்: ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், அற்புதங்களைச் செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளைப் பகுத்தறிதல், பற்பல பாஷைகளைப் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல், ஆவியினாலே விசுவாசம், அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும் அளிக்கப்படுகிறது." – 1கொரி 12:1, 4 – 12
- 10. பத்தையும் பற்றிக்கொள்:
மத்தேயு 22:35 – 40
"அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரை சோதிக்கும்படி: போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுமனதோடும் அன்பு கூறுவாயாக; இது முதலாம் கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.