சுவிசேஷம் அறிவிக்க வேண்டுமென்ற வாஞ்சையும், விருப்பமும் இருக்கலாம். ஆனால் எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கும் நண்பர்களுக்கு, எப்படி சுவிசேஷம் அறிவிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம் ...
தொடர்ந்து படித்தால் நீங்களும் எளிதாக சுவிசேஷம் அறிவிக்க ஆரம்பித்து விடுவீர்கள். சுவிசேஷம் என்றால் என்ன ? சுவிசேஷம் என்றால் நல்ல செய்தி (Good News) என்று சொல்லாம்.
தேவன் உலகத்திலுள்ள யாவரையும் நேசிக்கிறார் என்பதும், அவர் மனிதர்களின் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாட்டை எடுத்துரைப்பதும் சுவிசேஷம் எனப்படும்.
சுவிசேஷம் அறிவிப்பது அவசியமா?
'இயேசு : நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்கு 16:15) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
ஆம்! சுவிசேஷம் அறிவிப்பது அறிவிப்பது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொருக்கும் அவர் கொடுத்திருக்கும் கட்டளை. எனவே மெய்யான தெய்வத்தை அறியாத ஒவ்வொருவருக்கும் நாம் அந்த நற்செய்தியை அறிவிப்பது அவசியம்.
சுவிசேஷம் அறிவிப்பதினால் என்ன நடக்கும்?
இயேசு கிறிஸ்துவினால் பாவமன்னிப்பாகிய மீட்பு நாம் அறிவிக்கும் ஒவ்வொருக்கும் உண்டாகும். நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வளவு மகத்துவமுள்ள அந்த சுவிசேஷம் என்ன?
இயேசு கிறிஸ்து இரட்சகராக பரிகாரியாக இந்த உலகத்திற்கு வந்தார். மக்களின் நோய்களை குணமாக்கினார், பிசாசுகளை துரத்தினார், நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார்.
நம் பாவங்களுகாகவும், சாபங்களுக்காகவும், நோய் களுக்காகவும் அடிபட்டு கடைசி சொட்டு ரத்தத்தையும் உலக மக்களுக்காக சிந்தி சிலுவையிலே தொங்கி மரித்தார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்;
பரலோகத்திற்கு பலர் காண எடுத்துக்கொள்ளப்பட்டு பிதாவின் வலது பாரிசத்திலே போய் அமர்ந்தார். அவர் இரண்டாம் முறை பூமிக்கு, உலகத்தை நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாய் மீண்டும் வருவார். இதுவே மெய்யான உலக மக்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய சுவிசேஷம். எனவே... சுவிசேஷம் அறிவிப்போம் நரகத்தின் வாசலை அடைப்போம்!
சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ! (1 கொரிந்தியர் 9:16).