இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரெக்கன்ரிஜ் என்ற ஒரு தமிழர் வாழ்ந்து வந்தார். அவர் களவு மற்றும் கொலை குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆண்டவரின் ஊழியர் ஒருவர் சிறைச்சாலையில் அமைதியின்றி இருந்த பிரெக்கன் ரிஜ்ஜை சந்தித்துப் பேசினார். கருணை கடலாம் இயேசுவின் அன்பு அவரின் கல் மனதை கரைத்தது.
அருள்நாதரின் அன்பால் ஈர்க்கப்பட்டார். பாவியாகிய எண்ணையும் இயேசு நேசிக்கிறார் என்று உரக்கக் கூறி மகிழ்ந்தார்.
அவர் நம்பிக்கை இயேசுவின் மேல் வந்தது. அதன் விளைவாக தான் "இயேசு நேசிக்கிறார் இயேசு என்னையும் நேசிக்க யான் செய்ததென்ன மா தவமோ" என்று கீர்த்தனைப் பாடலை உள்ளம் உருக எழுதினார்.
சிறைச்சாலையில் அப்பாடலை பாடி பாடி மகிழ்ந்தார். இறுதியில் அப் பாடலை பாடிக்கொண்டே தூக்கு மேடையை நோக்கி மகிழ்ச்சியோடு சென்றார். ஆம் எந்த பாவியாக இருந்தாலும் நம் நேசர் இயேசு தள்ளவே மாட்டார்..!
மத்தேயு 9 ஆம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்கிறார். 1 தீமோத்தேயு 1 ஆம் அதிகாரத்தில், பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான் என்கிறார் பவுல்
ஆக நாம் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் அதை மன்னித்து நம்மை ஏற்றுக்கொள்ள இயேசு கிறிஸ்து ஆவலாய் இருக்கிறார்.
நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் நாம் முழங்கால் படியிட்டு நாம் செய்த பாவங்களை இயேசுவிடம் அறிக்கை செய்வதே..
வேதம் சொல்லுகிறது....
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். -நீதிமொழிகள் 28:13
நாமும் செய்த பாவங்களை அறிக்கை செய்து இன்றே விட்டுவிடும் போது இரக்கம் பெறுவோம்.