wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

பிரேசில் நாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த பழைய தேவாலயத்தின் சுவர்களும் கூரையும் மிகுந்த சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. ஒரு ஞாயிறு ஆராதனைக்கு பின் ஆலயத்தின் பாதிரியார், "நம் ஆலயத்தை செப்பனிடும் பணிக்கு நம்மிடம் போதிய பண வசதி இல்லை, ஆகவே அதற்குத் தேவையான பணத்தை நாம் சேர்பதற்காக ஒரு Special fund raising programme-ஐ (Sale) நடத்தலாம் என முடிவு செய்துள்ளேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அன்றைய தினம்

சம்பளம் வாங்குபவர்கள் பணமாகவும், வியாபாரம்/ தொழில் செய்பவர்கள், தாங்கள் வியாபாரம்/தொழில் செய்யும் சம்மந்தபட்ட பொருட்களையே, ஆலயத்தில் காணிக்கையாக கொண்டு வந்து வைத்தால் அதனை நாம் ஏலம் விட்டு அதன்மூலம் வருமானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். கடவுள் உங்களை ஆசீர்வதித்தற்கு ஏற்ப பொருட்களை வந்து படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

பாதிரியார் குறிப்பிட்ட அந்த நாள் வந்தது, காய்கறி வியாபாரம் செய்பவர்கள் காய்கறியும், ஆடை வியாபாரம் செய்பவர்கள் ஆடையும், ஹார்ட்வேர்ஸ் வியாபாரம் செய்பவர்கள் அதற்கேற்றாற் போன்ற பொருட்களையும், மாத சம்பளம் வாங்குபவர்கள் பணத்தையும் வந்து படைத்தனர். சபையார் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்தனர், அப்போது கோயிலின் முகப்பு வாசலை கண்ட சபையாருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது, காரணம் ஏலத்திற்கு வந்த பொருட்களில் ஒரு புத்தம் புதிய அழகிய சவப்பெட்டியும் (Coffin box) இருந்தது. நமது ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அடக்க ஆராதனை நடைபெறாதே, யார் இறந்து விட்டது? என்ன இது புதிதாக முளைத்துள்ளது? இதுவும் ஏலத்திற்கா? இதை யார் ஏலம் எடுப்பார்கள்? என ஒருவரை ஒருவர் கேட்டு முணுமுணுத்தனர்.

அப்போது அங்கு வந்த கோயில்பிள்ளையிடம் விசாரித்தனர். அதற்கு அவர் "அதோ கட்டம் போட்ட சட்டை போட்டுக் கொண்டு நிற்கிறாரே, அவர் கொண்டு வந்து வைத்துள்ள காணிக்கை பொருள் இது. அவர் ஒரு சவப்பெட்டி செய்யும் ஆச்சாரி (carpenter)" என்றார். சபையார் அனைவரும் அவரை ஒரு மாதிரி ஏளனமாக பார்த்தனர், ஆனால் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. பாதிரியார் சொன்னதுபோல், நீங்கள் என்ன தொழில் செய்து பிழைக்கிறீர்களோ, அதில் காணும் பொருட்களை படையுங்கள் என்றார், நான் சவப்பெட்டி (Coffin box) செய்து பிழைப்பு நடத்துகிறேன் அதனால் சவப்பெட்டியையே காணிக்கையாக வைத்துள்ளேன், என்றார்

ஆராதனை முடிந்தவுடன் ஏலம் தொடங்கியது. எல்லா பொருட்களையும் சபையார் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். இறுதியாக அந்த சவப்பெட்டியை ஏலத்திற்கு எடுத்து வந்து நிறுத்தினர். அனைவரும் திகைத்து அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தனர், யார் முகத்திலும் ஈயாடவில்லை. அங்கு ஒரே மயான அமைதி. யார் இதை ஏலம் கேட்டு வாங்கப் போகிறார்கள் என்று எல்லாருக்கும் ஒரே Tension. யாருமே சவப்பெட்டியை வாங்கலைனனா என்ன செய்வார்கள்?

அப்பொழுது திடீரென சவப்பெட்டி செய்பவரின், வயதான நண்பர் ஒருவர் எழுந்து, அந்த சவப்பெட்டியை 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு விட்டு, அதனை பாதிரியாருக்கு அன்பளிப்பாக கொடுப்பதாக கூறினார், உடனே பாதிரியார் முறைத்து எழுந்தாரே பார்க்கலாம். எப்படியோ உடன் சுதாரித்துக்கொண்டு அதை 30 ஆயிரத்திற்கு அவர் ஏலம் கேட்டு அதனை L.C.F. Secretary க்கு தாம் அளிப்பதாகக் கூறினார். L.C.F. Secretary சட்டென துடித்தெழுந்து சவப்பெட்டியை 50,000 ரூபாய்க்கு ஏலம் கேட்டு அதனை உபதேசியாருக்கு அளிப்பதாக கூறினார், உடனே உபதேசியார் "என்ன Secretary என்னை சாக சொல்றீங்களா" என கோபமாக கேட்டு எழுந்து, சவப்பெட்டியை 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு அதனை அவர் அருகில் அமர்ந்திருந்த L.C.F. Treasurer-க்கு அளிப்பதாகக் கூறினார். L.C.F. Treasurer எழுந்து சவப்பெட்டியை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு மற்றொருவருக்கு என்றும், அந்த மற்றவர் எழுந்து அதற்குமேல் தொகை கோரி அடுத்தவர் என்று கூறவே, இப்படி மாறி மாறி சவப்பெட்டி, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில் வந்து நின்றது.1தரம், 2தரம் என, கடைசியாக மாட்டினவர்கள் முழி பிதுங்கி கடுப்பாகி செய்வதறியாது நின்றனர்.

அப்பொழுது புதிதாக அந்த ஊருக்கு சுற்றுலா வந்திருந்த மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் எழுந்து அந்த சவப்பெட்டியை 2 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு, அதனை சவப்பெட்டி செய்யும் அந்த ஆசாரிக்கே அன்பளிப்பாக கொடுப்பதாக கூறினார். அந்த ஆசாரியும் சந்தோஷமாக அதனை ஏற்றுக்கொண்டு புன்முறுவலுடன் தான் காணிக்கையாக படைத்த சவப்பெட்டியை தன் வீட்டிற்குச் சுமந்து சென்றார். அவரை கேவலமாக நோக்கிய கண்கள் தரையை குத்தி நின்றது. சல்லி காசும் போடாமல் எல்லாரையும் காட்டிலும் பெரிய தொகையை ரூ 2லட்சம் Contribute பண்ணின அந்த நபரை பார்ப்பதற்கே வெட்கி தலை குனிந்து நின்றனர்.

கடவுளின் ஊழியத்தை நீங்கள் பல வழிகளில் செய்யலாம்/தாங்கலாம். அவைகளை சிலர் ஏளனமாகவும், சிறுமையாகவும் நோக்கலாம். உங்கள் மனதை கர்த்தர் அறிவார். நீங்கள் உங்களின், பெருமைக்காக/சுயவிளம்பரத்திற்காக, கட்டாயமாகவும், விசனமாகவும் போலியாக மனமில்லாமல் செய்யும் சேவைகளை/ஊழியத்தை அவர் ஒருநாளும் ஏற்கமாட்டார்.