wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

"இயேசு கிறிஸ்து தெய்வமே அல்ல, காந்தி, நேரு போல வரும் ஒரு மனிதர்தான். அவர் வந்தார், சில நல்ல காரியங்களை செய்தார், மரித்து விட்டார்" என்று வாக்குவாதம் பண்ணி கொண்டிருந்தான் அந்த சிறுவன். தெய்வபக்தியும், மத வைராக்கியமும் அவனுள் மிகுந்திருந்தன. பேச்சிலும், தோற்றத்திலும் அவை வெளிப்பட்டன. சென்னையின் நகர சூழலிலும் சந்தனப் பொட்டுடன் பக்திமயமாய் அவன் வகுப்பிற்கு வரும்போது அவனை "சந்தப் பொட்டு" என்றே அழைத்து வந்தனர்.

அவனுடைய குடும்பம் சில வருடங்களுக்கு முன்புதான் சென்னையில் குடியேறி இருந்தது வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை ஸ்கூலில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொது திடீரென அவனது இருதயம் மோசமாய் பாதிக்கப்பட்டது. வலது கால் முற்றிலுமாய் செயலற்று போனது. அப்பொழுது அவனுக்கு வயது 14.

மருத்துவர்கள் பலரிடம் பெற்றோர் காண்பிக்க, எவராலுமே என்ன வியாதி என்றே தீர்மானிக்க முடியாமல் போனது . எலும்பும் தோலும் ஆனான் அந்த சிறுவன். வெளியில் தெரியும் அளவிற்கு இதயம் வீங்கிவிட வலது கால் முற்றிலும் செயலற்று போனது. ஒரு கட்டத்தில் இனி மருத்துவத்தால் உங்கள் மகனை குணமாக்க முடியாது என்று மருத்துவர்கள் அனுப்பிவிட, பெற்றோர்கள் பல தெய்வங்களை நோக்கி வேண்டி பார்த்தார்கள். மரண படுகையிலிருந்த அவனுடைய வாழ்வுக்கு தெய்வங்கள் என சொல்லப்படும் எவரும் பதில் கொடுக்கவில்லை. அதனால் வருத்தத்தின் ஆழத்தில் அவனது தாய் மூழ்கி இருக்க, அவனது நிலையோ பரிதபிக்க வைத்தது. சாகப்போகிறவனை கடைசியாய் பார்ப்பது போல் பார்த்து சென்றனர் அவனது உறவினர்கள்.

அடுத்தவர்கள் உதவியுடனேயே தனது தினசரி வாழ்வை கழித்து வந்த அச்சிறுவனை பார்க்க வந்தார் ஒரு கிறிஸ்தவ சகோதரர் "என் மகனை கைவிட்டுவிட்டார்கள், என் மகனுக்காக இயேசுவினிடத்தில் ஜெபம் செய்வீர்களா?" என்று அவரிடம் கண்ணீரோடு கேட்டார்கள் அவனது தாய்.

அவர் ஜெபம் செய்ய ஆரம்பித்தார். அவன் கேலி செய்த, மிகவும் வெறுத்த இயேசுவிடம் அந்த சகோதரர் ஜெபம் பண்ணுவதை அந்த சிறுவன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று அவனது உணர்வுகள் தெய்வீக வல்லமை ஒன்று அந்த அறைக்குள் இறங்குவதை உணர்ந்தது. படுகையின் அருகில் யாரோ வருவதையும், பின் , அவருடைய கரம் தன்னை தொட்டதையும் உணர முடிந்தது. மின்சாரத்தை போலிருந்த தேவ வல்லமை, செயலற்று கிடந்த அவனது வலது கால் வழியாக பாய்ந்து சென்றது. அவனுள் மெலிதாய் பயம் எழும்பிற்று . அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் வடிந்தது. அந்த சகோதரர் ஜெபித்து கொண்டிருக்க, அச்சிறுவன் எழுந்து உட்கார்ந்த பின் அவனது இருதயம் சரியாகி இருந்தது. தனக்கு சுகமளித்த இயேசு கிறிஸ்துதான் மெய்யான தெய்வம் என்று அவன் மனம் சொல்லிற்று. அவன் அதை நம்பி விசுவாசித்தான்.

இன்று அந்த சகோதரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற அற்புதத்தை உலகமெங்கும் அறிவித்தும், நடப்பித்தும் வருகிறார். அற்புதங்கள் இன்றும் பலருக்கு தேவை. தேவனாலேயே அது சாத்தியம். தேவன் அதற்க்கு பயன்படுத்தும் பாத்திரமாய் விளங்குகிறவர் தான் சகோதரர். மோகன் சி. லாசரஸ்.

சந்தன பொட்டுவின் மணம் இன்று அவரிடம் இல்லை. இயேசு கிறிஸ்துவின் இனிய நற்காந்தம் மட்டுமே அவரிடம் எவரையும் வசீகரிப்பதாய் இருக்கிறது.

நண்பர்களே! நீங்களும் உங்களுடைய வாழ்கையை இயேசுவினிடம் ஒப்புகொடுத்தால் உங்கள் வாழ்கையையும் அவர் மாற்றி, உங்களை பல கோடி மனிதர்களுக்கு ஆசிர்வாதமாக எடுத்து பயன்படுத்துவார்.

"குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" யோவான் 8:36