அசைக்கப்படுவதில்லை
கர்த்தரை என் முன்பாக வைத்துவிட்டேன்
நான் அசைக்கப்படுவதில்லை
கறை திரை ஒன்றும் நெருங்காது
இரட்சகரை என்னோடு அணைத்துக்கொண்டேன்
சாத்தானின் சேனை என்னை அணுகாது
செல்லுகின்ற இடமெல்லாம் சூழ்ந்திடுவார்
கரங்களில் ஏந்தி என்னை நடத்திடுவார்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்