எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு - என்னை
நான் மனரம்மியமாய் இருக்கின்றேன்
பட்டினியாய் இருந்தாலும் பரிபூரண மடைந்தாலும்
தாழ்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும்
போதிக்கப்பட்டேன் நான் - என்னை
என் தேவை யாவையும் தருவாரே
தமது ஜசுவரியத்தின்படியே எனது குறையை நிறைவாக்கும்
இயேசுவை விசுவாசித்தே தேவ
மகிமையைக் காண்பேன் நான் - என்னை
நான் சோர்ந்து தரித்திரம் அடையாமல்
உற்சாகமாய் உழைத்திடுவேன் உண்மை ஊழியம் செய்திடுவேன்
தேவனை அதிகாலை தோறும்
தேடிக் கண்டடைவேன் நான் - என்னை
நான் புதுப்பெலனை அடைந்திடுவேன்
கழுகுபோல செட்டைகளையடித்து நான் எழும்பிடுவேன்
சோர்ந்திட மாட்டேன் நான் - என்னை
நான் அவருக்காகவே காத்திருப்பேன்
அவனவன் கிரியைப்படியே அவர் அருளும் பிரதிபலனே
கொண்டு வருவாரே - இயேசு - என்னை