- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
அழகானவர் அருமையானவர் இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு
சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலன்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்தும நேசரே - அழகானவர்
கன்மலையும் கோட்டையும் துணையுமானார்
ஆற்றி தேற்றி காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே - அழகானவர்
கல்வாரி மேட்டிலே கொல்கோதாவிலே
நேச இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லைதான் இயேசு ராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர் - அழகானவர்