அல்லல் தொல்லை அணுகிடினும் நில்லாமல் ஓடு
நேராய் ஓடு - தேவன் நியமித்த ஓட்டம்
கன்மலைக் கிறிஸ்துவின்மேல் கண் பதித்தோடு - பாரம்
ஊச்சிதமான அழியா கிரீடம் உனக்குண்டே - பாரம்
நிச்சயத்துடனே ஓடி பெறுவாய் பரிசை - பாரம்
கூடுதல் பெலன் அளிப்பார் குதித்தே ஓடுவாய் - பாரம்
அசைவில்லாத நாட்டை நோக்கி ஆவலாய் ஓடு - பாரம்
எக்காளம் தொனிக்கும் வரை எதிர்நோக்கி ஓடு - பாரம்
பாட்டுப்பாடி ஆனந்திப்பாய் பரனின் வீட்டிலே - பாரம்
வல்ல விசுவாசம் காத்தால் நீதியின் கீரிடம் - பாரம்