இன்பம் பிறக்குதம்மா
காசினியில் அவர்போல் எவரையும்
கண்டதில்லையம்மா ...
பேரின்பம் சொட்டுதம்மா
பார்க்க தொடங்கினாலோ பார்வை எல்லாம்
பாவியென் மேலேயம்மா
கூசாமல் தொட்டாரம்மா
கஷ்டப்படுவோரைக் கண்டதும்
கண்ணீர் வடித்தாரம்மா ...
சிந்தி மரித்தாரம்மா
உலகை மீட்டிடவே ஆண்டவர்
ஆன்புடன் மாண்டாரம்மா...