ஆருயிர் உறவே,
ஆனந்தம், ஆனந்தமே!
அந்நாளில் எனை வெறுத்தேன் ஐயா
உம் தயை பெரிதையா - என்மேல்
உம் தயை பெரிதையா -அன்பே
நரலோகத்தில் அன்பேன் ஐயா
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ - அன்பே
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே - என்னையும்
அணைத்தீர் அன்பாலே -அன்பே
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா -அன்பே
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ -அன்பே