அழுது ஜெபித்திட சென்றார் - இயேசு
மன வியாகுலம் அடைந்தார்
தன்னைத்தான் வெறுத்தவர் ஜீவித்தார்
இந்த பூலோகில் யாருமில்லை
நம்மை நேசித்தார் பரலோக தேவமகன் - அமைதி
அவருடன் அப்பமும் புசித்தான்
இந்த யூதாஸ் என்னும் பணப்பிசாசினால்
இயேசு காட்டி கொடுக்கப்பட்டார்
பண ஆசையே எல்லா தீமைக்கும் வேரல்லோ - அமைதி
சத்துருவின் கைகள் ஓங்கிற்றே
வேஷம் மாறும் சாத்தான் வேதம் ஓதுகிறான்
வேதப் புரட்டன் வஞ்சிக்கிறான்
ஜாமக்காரரே! விழித்தலறி ஜெபிப்போம் - அமைதி
ஆண்டவர் வேதனையுற்றாரே
சவுக்கால் அடித்தே சுத்தம் செய்கின்றாரே
சபை பரிசுத்தம் அடைந்தே
பயபக்தியாய் தேவ ஜனம் ஆராதிப்போம் - அமைதி
முந்தி வந்து முடிவில் அழிவான்
நாமோ எடுத்துக் கொள்ளப்படுவோம்
நீதிமான்களே! வேகம் ஆயத்தப்படுவோம் - அமைதி