பெலனாய் காப்பவர்
திடமாய் ஜெயித்திட
எனது என்றென்றும் துணையே
இயேசு மரித்து எழுந்தார்
அழிந்திடாத உரிமை பெறவே
மறுஜென்மம் அடையச் செய்தார் - அரணும்
மகிமை நம்பிக்கை ஈந்தார்
நீதிமானை செழிக்க செய்து
என்றென்றும் ஜெயம் நல்குவார் - அரணும்
உம்மால் சேனைக்குள் பாய்வேன்
எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்
என்றென்றும் துணை செய்கின்றார் - அரணும்
நல்ல நம்பிக்கை ஈந்தார்
கிருபை சொரிந்து அன்பை பொழிந்தார்
வளர்ந்தே நிலைத்திடுவோம் - அரணும்
ஓளியை அருளிச் செய்வார்
எந்தன் தீபம் நின்று எரிய
என்றென்றும் அருள் செய்குவார் - அரணும்