அன்பரின் கதறல் கேட்டிடுதே
நாசத்தின் வழியை நாடிடுதே
இயேசுவின் அன்பு நம்மையும் நெருக்க
எழும்பிடுவோம் நாம் வாலிபரே - 2 - அறுவடை
அழுகையும் கண்ணீரும் வாழ்க்கையிலே
உறக்கமும் இல்லை முழு உணவில்லை
உணர்ந்திடுவீர் இதை வாலிபரே - 2 - அறுவடை
வாதையில் வாடிடும் கூட்டத்தைப் பார்
ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை
அன்பினைக் காட்டவும் யாருமில்லை - 2 - அறுவடை
நாளினில் லட்சங்கள் செல்கிறதே
திறப்பினில் நிற்க ஆளில்லை என்று
திகைத்து கதறிடும் இயேசுவைப் பார் - 2 - அறுவடை
அழுவதன்றி வேறென்ன செய்வார்
யாரை அனுப்புவேன் யார் போவார் என்றார்
கதறலை என் உள்ளம் கேட்டிடாதோ - 2 - அறுவடை
அர்ப்பணித்தேன் எந்தன் வாழ்க்கையினை
பாரினில் கழுதையாய் சுமந்தும்மை சென்று
பாதத்தில் விடுவேன் என் ஜீவனையே-2 - அறுவடை