நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ - நீயும்
பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில்
கண்கொள்ளாத காட்சியே
கண்டிடும் வேண்டிடும்
பாவப் பாரம் நீங்கிடும் - அழைக்கிறார்
பேயையும் வென்றவர்
நீதிபரன் உன்நோயை
நிச்சயமாய் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே
நேயமாய் அழைக்கிறார் - அழைக்கிறார்
துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே
அண்ணல் இயேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே
துரிதமாய் நீ வாராயோ - அழைக்கிறார்
அழகற்று தோன்றினார்
சொந்தமாகச் சேர்த்திட
இந்த பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும்
சந்திப்பார் நீ வாராயோ - அழைக்கிறார்
காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே
கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார்
உண்டு மீட்புனக்குமே - அழைக்கிறார்
சத்திய வாசனே!
வஞ்சமற்ற வாயனே!
வந்தணைக்கும நேயனே!
தஞ்சமே! தன்னையே!
தந்துனையழைக்கிறார் - அழைக்கிறார்