- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
கர்த்தருக்கள் மகிழ்ச்சியே எந்தனின் பெலன்
தேவனுக்குள் மகிழ்வதே எந்தனின் ஆவல்
இப்போதும் சந்தோஷம் சமாதானமே
திராட்சை இரசத்தின் நேசம் பொங்கி வழியுதே
- ஆனந்த தைல
ஸ்தோத்திரத்தின் மகிழ்ச்சியால் பூரிப்படைந்தால்
துன்பம் துக்கம் எல்லாமே ஓடிப்போகுமே
பரலோக சந்தோஷம் அனுபவிக்கவே
பரலோகத்தின் அன்பு ஊற்றப்பட்டதே
- ஆனந்த தைல
ஆட்டுக்குட்டி கல்யாண நாளும் வந்தது
மணவாட்டி தன்னையே ஆயத்தம் செய்தாள்
களிகூர்ந்து துதிகள் போற்றிப் பாடுவோம்
நேசர் அவரின் மார்பில் மிகவும் மகிழுவோம்
- ஆனந்த தைல