ஆசிகளிந் நேரமிதிலே - தாசரின் புகலிடமே
நேசமுடன் வாழ்ந்திடவே - இயேசு
மாறாத பரம் பொருளே - ஆருயிரிவர்க்கு நீரே
தாருமிந்த நேரமே பட்சமுடனப்பனே
ஆறாக அருள் பாயவே - இயேசு
தானங்களைத் தந்தருளியே - விந்தை விளங்கச் செய்தீரே
ஞானாவும் அருள் தாருமே - இயேசு
ஓன்றாக வாழ்ந்திடவே - இன்றே யாசீர்வதியுமே
அன்பின் பெருக்கமே என்றும் விளங்கவே
அன்பே அருள் புரிவீரே - இயேசு
பக்தியுடனே தொடர்ந்து - சத்தியம் நிலை நிறுத்த
சுத்த ஜீவியத்தில் நித்தமும் நடந்து
துத்தியம் பாடிடவே - இயேசு
வாழ்நாளில் வாழ்ந்திடவே நாதா அருள் புரியுமே
ஜெகமதில் தந்து போற்றவே - இயேசு