எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார்
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே(ளே)
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் எக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்
நொடிப்பொழுதே சுகம் தருவார்
பேய்களெல்லாம் நடுநடுங்கும்
பெரியவர் திரு முன்னே - நம்ம
பயங்களெல்லாம் நீக்கிடுவார்
ஆவியினால் நிரப்பிடுவார்
அதிசயம் செய்திடுவார்
காயமெல்லாம் உனக்காக
திரு இரத்தம் உனக்காக
திருந்திடு என் மகனே