இன்றே உனக்கற்புதம் செய்வார்
உன் கண்ணீர்கள் துடைக்கப்படும்
மனதுருகி நோய்கள் நீக்கினார்
ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்
அனைவரையும் போஷித்து அனுப்பினர்
எல்லாம் செய்ய வல்லவர்
மனதுருகி அழாதே என்றார்
கிட்ட வந்து பாடையைத் தொட்டார்
மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ்
படுத்திருந்த மகனைத் தேடிச் சென்றார்
(இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார்
மனதுருகி ஓடிச் சென்றார்
கழுத்தைக் கட்டி முத்தங்கள் கொடுத்தார்
கொழுத்த கன்று அடித்துக் கொண்டாடினார்
கடலின் மேல் நடந்தே வந்தார்
பயப்படாதிருங்கள் என்று தேற்றினார்
படகில் ஏறி பெருங்காற்றை அமர்த்தினார்