பிரகாசம் அடைகின்றேன் (2)
அப்பா நான் உமது பிள்ளை
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2)
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம்
இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர்
இறுதிவரை நீர் நடத்தி செல்வீர்
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
ஒரு நன்மையையும் குறைவதில்லையே
நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்
அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்
பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே
யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்