- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை.
என்மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார் (2)
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே - என்னை
பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்து காலத்தில் அரணான கோட்டையும் (2)
கேடகமும் துருகமும் பெலனவரே - என்னை
ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமில்லை ஆகையால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தனிலே (2)
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் - என்னை