என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கதா மலையின் மேல்
நடந்தே ஏறுகின்றார்
சின்னப்பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் - ஏறுகின்றார்
நெஞ்சை பிளந்தான் ஆ கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் - ஏறுகின்றார்
சொந்தப்படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசித்து வா குருசெடுத்தே - ஏறுகின்றார்
சொந்தக் குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறுகின்றார்
பின்பற்றிவா சிலுவை வரை
காடியைப் போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறுகின்றார்
சொந்த தாயின் அன்பதுவே
எருசலமே எருசலமே
என்றழுதார் கண்கலங்க - ஏறுகின்றார்