அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிசேஷம் சொல்லணுமே