காத்தவர் காப்பார் இன்னும் இனிமேலும்
காத்திடுவார் கலங்காதே மனமே காத்திடுவார்
அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை என்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றுமதை எண்ணிப்பார் - காப்பார்
இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று
பின்னும் இரங்கவில்லையோ
இல்லையோ இல்லையோ இல்லையோ
மனஸ்தாபம் கொள்ள வில்லையோ - காப்பார்
இகழ்ந்து விடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டயிழுப்பவரும்
உனக்கென்றும் அளிப்பவரே - காப்பார்
தாம் உயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுன்னை தள்ளிவிடாது
கைகொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே - காப்பார்
அடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திட
கனிவுடனாதரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார் - காப்பார்