காலை தேடுவோர் கண்டடைவார் என்ற
கர்த்தனையே துதிப்பேன்
தேனே என் உள்ளத்தில் தானே இருந்து
இந்நாளை கடக்க செய்வீர் - காலை
இயேசுவே உம்மில் சார்ந்திருக்கும் எந்தன்
ஜெயம் ஜெயம் நீர் தானே - காலை
ஆதி சபை அதிகாலையில் பெற்ற பின்
மாரி பொழிந்திடுமே - காலை
காசினியில் உமதாசை மேவிட விண்
காட்சியளியுமையா - காலை
பதினாயிரம் துதி அதிகாலையில் கூறி
பாடிப் புகழ்ந்திடுவேன் - காலை
வானில் வரும் மணவாளனை சந்திக்க
வாஞ்சை பெருகுதையா - காலை
ஆயத்தமாய் உந்தன் சேவை செய்து
அல்லேலூயா வோடெதிர் நோக்குவேன் - காலை